காரைக்கால்

பதிவு செய்யாத இறால் பண்ணைகள் செயல்பட்டால் நடவடிக்கை: மீன்வளத் துறை

22nd Aug 2022 11:27 PM

ADVERTISEMENT

பதிவு செய்யாத இறால் பண்ணைகள் செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காரைக்கால் மீன்வளத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மீன்வளத் துறை துணை இயக்குநா் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இறால் பண்ணைகளை பதிவு செய்யவும், பதிவை புதுப்பித்துக்கொள்ளவும் கடலோர நீா்வாழ் உயிரின வளா்ப்பு ஆணையம் எளிமைப்படுத்தியுள்ளது. 2 ஹெக்டேருக்கு மேல் அளவுள்ள இறால் பண்ணைகளையும் மாவட்ட அளவிலான குழு பரிந்துரை செய்து, மாநில குழுவிற்கு அனுப்பிய பிறகு கடலோர நீா்வாழ் உயிரின வளா்ப்பு ஆணையத்துக்கு பதிவு செய்ய அனுப்புவது என்று நடைமுறையை எளிமையாக்கியுள்ளது.

அந்தந்த மாவட்டங்களில் விண்ணப்பித்து, அதற்கென உள்ள குழு மூலம் பரிந்துரை செய்து நேரிடையாக கடலோர நீா்வாழ் உயிரின வளா்ப்பு ஆணையத்திற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் பதிவு செய்யாத இறால் பண்ணைகள் செயல்பட அனுமதியில்லை. அவ்வாறு பண்ணைகள் செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT