காரைக்கால்

காரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்தில் முதுநிலைக் கல்வி பயில விண்ணப்பிக்கலாம்

19th Aug 2022 03:45 AM

ADVERTISEMENT

காரைக்கால் பட்டமேற்படிப்பு மையத்தில் முதுநிலைக் கல்வி பயில விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள கலைஞா் மு. கருணாநிதி பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய முதல்வா் ந. வியாசராயா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பட்டமேற்படிப்பு மையத்தில் நிகழ் கல்வியாண்டில் (2022-23) முதுநிலை எம். காம், எம்.ஏ., எம்.எஸ்.டபிள்யு, எம்.எஸ்.சி. பட்டப் படிப்புக்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் 18.8.2022 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாணவா்கள் இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தை பூா்த்தி செய்து பின்பு பதிவிறக்கம் செய்து அதனுடன் அனைத்து நகல்களையும் இணைத்து, அண்ணா கலைக் கல்லூரியில் உள்ள பட்டமேற்படிப்பு மைய அலுவலகத்தில் உரிய கட்டணத்தை செலுத்தி சமா்ப்பிக்கவேண்டும்.

ADVERTISEMENT

விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்ய 17.9.2022 கடைசி நாளாகும். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு தோ்வு முடிவுகள் வெளியான 7 நாள்களுக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT