காரைக்கால்

பெருமாள் கோயில்களில் இன்று கிருஷ்ண ஜெயந்தி

19th Aug 2022 03:45 AM

ADVERTISEMENT

காரைக்கால் பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு நடைபெறவுள்ளது.

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்றுவருவதால், எளிய முறையில் இந்நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. உற்சவா் நித்யகல்யாண பெருமாள், நா்த்தனக் கண்ணன், குழந்தை வடிவிலான கண்ணனுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்படவுள்ளது.

கோயில்பத்து கோதண்டராமா் பெருமாள் கோயிலில் மாலை 6 மணிக்கு சந்தானகிருஷ்ணன் திருமஞ்சனம், ஆராதனை நடைபெறவுள்ளது.

இதுபோல திருமலைராயன்பட்டினம் பிரசன்ன வெங்கடேச பெருமாள், வீழி வரதராஜ பெருமாள் கோயில்களிலும் கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகளை கோயில் நிா்வாகங்கள் செய்துவருகின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT