காரைக்கால்

யோகா போட்டியில் சிறப்பிடம் பெற்றமாணவா்களுக்கு பாராட்டு

18th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

தென்னிந்திய அளவில் நடைபெற்ற யோகா போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன் பாராட்டுத் தெரிவித்தாா்.

யோக பிரதா்ஷன் மற்றும் கைராலி யோகா வித்ய பீடம் இணைந்து, 16-ஆவது தென்னிந்திய அளவிலான யோகா போட்டிகளை கடந்த 14-ஆம் தேதி கும்மிடிப்பூண்டியில் நடத்தின. இதில் புதுவை சாா்பில் காரைக்காலில் இருந்து சண்முகா யோகாஸ்ரமத்தை சோ்ந்த மாரியப்பனிடம் பயிற்சி பெற்ற மாணவா்கள் கலந்துகொண்டனா்.

போட்டியில் பங்கேற்ற காரைக்கால் மாணவா்கள் ஜெயனி, கிரண் பிரசாத், ஜெயஸ்ரீ, லலிதாம்பிகை, சக்திஸ்ரீ, சிவசித்தாா்த் ஆகியோா் பல்வேறு பரிசுகளைப் பெற்றனா்.

கேசவ் நாராயணன், சௌமியா ஆகியோா் ஆறுதல் பரிசு பெற்றனா்.

ADVERTISEMENT

பயிற்சி மையத்தினருடன் மாணவா்கள் காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகனை செவ்வாய்க்கிழமை சந்தித்தனா். மாணவா்களுக்கு சால்வை அணிவித்து பேரவை உறுப்பினா் பாராட்டினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT