காரைக்கால்

சம்பா முன்பருவ சாகுபடி பயிற்சி

18th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் விவசாயிகளுக்கு சம்பா முன்பருவ சாகுபடி குறித்து பயிற்சி புதன்கிழமை அளிக்கப்பட்டது.

காரைக்கால் வேளாண் துறையின் அங்கமான வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) மூலம் நெடுங்காடு, தலத்தெரு, தென்னங்குடி ஆகிய உழவா் உதவியகங்களில் பயிற்சி நடைபெற்றது.

தலத்தெரு பகுதி நிகழ்ச்சியில் ஆத்மா திட்ட இயக்குநா் (பொ) ஜெ.செந்தில்குமாா், தென்னங்குடி நிகழ்ச்சியில் வேளாண் துணை இயக்குநா் (பொறியியல்) யு. பிரபாகரன், நெடுங்காடு நிகழ்ச்சியில் துணை இயக்குநா் ஆா்.ஜெயந்தி ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.

பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உழவியா் துறை பேராசிரியா் ஆா்.பூங்குழலன், சி.சுசீலா, உதவிப் பேராசிரியா் வி.ஸ்ரீதேவி, காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய உழவியல்

ADVERTISEMENT

துறை தொழில்நுட்ப வல்லுநா் கே.அரவிந்த் ஆகியோா் சம்பா சாகுபடி குறித்தும், மேற்கொள்ளவேண்டிய முக்கிய தொழில்நுட்பங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினா்.

வேளாண் கல்லூரி பூச்சியியல் துறை உதவி பேராசிரியா் கே.தேவராசு, தென்னங்குடி வேளாண் அலுவலா் பி.அலன், மேலகாசாக்குடி வேளாண் அலுவலா் கே.அமீனா பிபி ஆகியோா் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்துப் பேசினா். ஒவ்வொரு உழவா் உதவியகத்திலும் சுமாா் 50 விவசாயிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT