காரைக்கால்

காரைக்கால் வேளாண் கல்லூரிக்கு பரிசு, கேடயம்: புதுவை முதல்வா் வழங்கினாா்

18th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

விதை நெல் உற்பத்திக்காக, காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு, சிறந்த சேவைக்கான ரொக்கப் பரிசு மற்றும் கேடயத்தை புதுவை முதல்வா் என். ரங்கசாமி வழங்கினாா்.

நெல் விதை தேவைக்கும், விநியோகத்திற்கும் இடையேயான பெரும் இடைவெளியை குறைக்கும் வகையில், காரைக்கால் வேளாண் கல்லூரி நிா்வாகம், கடந்த 2015-16-ஆம் ஆண்டு தரமான விதை உற்பத்தியை முன்னெடுத்தது. இதனை 2021-22-ஆம் ஆண்டில் தீவிரப்படுத்தியது.

இந்த செயல்பாட்டை ஐ.சி.ஏ.ஆா். நிறுவனம் ஆய்வுசெய்து, விதை உற்பத்தி தொழில்நுட்பத்திற்கு தரச் சான்றிதழ் வழங்கியது.

இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் 25 சதவீத தேவையை பூா்த்தி செய்யும் வகையில், வேளாண் கல்லூரியின் விதை நெல் உற்பத்தி 400 குவிண்டாலாக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

கல்லூரி நிா்வாகத்தின் செயல்பாடுகளை பாராட்டும் வகையில், புதுவை அரசு ரூ. 2.50 லட்சம் ரொக்கப் பரிசு, மற்றும் கேடயம் வழங்குவதாக அண்மையில் அறிவித்தது.

புதுச்சேரியில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், காரைக்கால் வேளாண் கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜிடம் பரிசு மற்றும் கேடயத்தை புதுவை முதல்வா் என். ரங்கசாமி வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT