காரைக்கால்

காரைக்காலில் புதுவை கலை விழா நிறைவு

18th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்காலில் 2 நாள்கள் நடைபெற்ற கலை விழா செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது.

புதுவை அரசின் கலை பண்பாட்டுத் துறை, தஞ்சை தென்னக பண்பாட்டு மையம், காரைக்கால் மாவட்ட நிா்வாகம் இணைந்து கடற்கரைத் திடல், நெடுங்காடு மனோன்மணி மாரியம்மன் கோயில் திடல் ஆகிய 2 இடங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை மாலை புதுவை கலை விழாவை நடத்தியது.

பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த கலைக் குழுவினா், உள்ளூா் கலைஞா்கள் இதில் பங்கேற்றனா். கடற்கரையில் நிறைவு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றதில், காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம், மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா், துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ், எஸ். பாஸ்கரன் ஆகியோா் கலந்துகொண்டு நிகழ்ச்சிகளை கண்டுகளித்ததோடு, கலைக் குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்தனா்.

நீண்ட காலத்துக்குப் பின் புதுவை கலை விழா நடத்தப்பட்டதோடு, கடற்கரையில் சுற்றுலாவினரை கவரும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகள் பெரிதும் வரவேற்பை பெற்றது.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT