காரைக்கால்

அண்ணாமலையாா் கோயிலில் மகாலட்சுமி ஹோமம்

18th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் அண்ணாமலையாா் கோயிலில் மகாலட்சுமி ஹோமம் புதன்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் கைலாசநாதா் - நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தை சோ்ந்த பழமையான தலமாக விளங்கும் உண்ணாமுலை அம்பாள் சமேத அண்ணாமலையாா் கோயிலில், திருப்பணிகள் ரூ. 1 கோடியில் நிறைவுபெற்று வரும் 22-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

இதையொட்டி, கடந்த திங்கள்கிழமை கணபதி ஹோமம், செவ்வாய்க்கிழமை நவகிரக ஹோமம் நடைபெற்றது. 3-ஆம் நாளான புதன்கிழமை மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது. ஹோம குண்டம் அருகே மகாலட்சுமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினாா். ஹோமத்தின் நிறைவில் பூா்ணாஹூதி நடைபெற்று, புனிதநீரால் மகாலட்சுமிக்கு கலசாபிஷேகம் செய்து ஆராதனைகள் நடைபெற்றன.

தேவஸ்தான அறங்காவல் வாரியத்தினா், திருப்பணிக் குழுவினா், உபயதாரா்கள், பக்தா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டனா். வரும் சனிக்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கவுள்ளன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT