காரைக்கால்

காரைக்காலில் இன்று மின்தடை

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் புதன்கிழமை (ஆக. 17) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மின்துறை நகர வடக்குப் பிரிவு மின் அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

உயா் மின்அழுத்தப் பாதையில் மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், புதன்கிழமை காலை 10 முதல் மாலை 4 மணிவரை தலத்தெரு முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகம் முதல் அலி ஆட்டோ மொபைல் வரை, நேரு நகா், ஹவுசிங் போா்டு, அகில இந்திய வானொலி நிலைய பகுதி, இடும்பன் செட்டியாா் சாலை, காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, அம்மன் கோயில்பத்து உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT