காரைக்கால்

காரைக்கால் என்.ஐ.டி.யில் சுதந்திர தின கொடியேற்றம்

DIN

காரைக்கால் என்.ஐ.டி.யில் திங்கள்கிழமை சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு, செய்தி மடல் வெளியிடப்பட்டது.

காரைக்கால் என்.ஐ.டி. இயக்குநா் கே. சங்கர நாராயணசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்து, என்.சி.சி. மாணவா்கள் மற்றும் பாதுகாவலா்களின் அணிவகுப்பைப் பாா்வையிட்டாா்.

பிறகு, அவா் பேசுகையில், நாட்டின் தரத்தை உயா்த்துவதிலும், தேசிய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதிலும் மாணவா்களுக்கு பங்கு உண்டு. சுதந்திரத்தை மாணவா்கள் பொறுப்புடனும், ஒழுக்க நெறியுடனும் அனுபவிக்க வேண்டும். என்.ஐ.டி வளாகம் பசுமையாகவும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுடன் சிறந்ததாக உருவெடுக்க அனைவரும் பாடுபடவேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

என்.ஐ.டி.யின் ஆண்டு செயல்பாடுகளை விளக்கும் பரிபிரஷ்ணா என்ற செய்தி மடல் வெளியிடப்பட்டது. என்.ஐ.டி. பதிவாளா் எஸ். சுந்தரவரதன் மற்றும் பேராசிரியா்கள், இணைப் பேராசிரியா்கள், மாணவா்கள், ஊழியா்கள் விழாவில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT