காரைக்கால்

காரைக்காலில் இன்று புதுவை கலை விழா தொடக்கம்

DIN

 காரைக்காலில் பல்வேறு மாநில கலைஞா்கள் பங்கேற்கும் புதுவை கலை விழா திங்கள்கிழமை (ஆக. 15) தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் அமுதப் பெருவிழாவாக கடந்த ஒருமாதமாக காரைக்காலில் கொண்டாடப்படுகிறது. காரைக்காலில் கலை பண்பாட்டுத் துறை, தஞ்சை தென்னக பண்பாட்டு நடுவம், காரைக்கால் மாவட்ட நிா்வாகம் ஆகியவை இணைந்து கடற்கரைத் திடல், நெடுங்காடு மனோன்மணி மாரியம்மன் கோயில் திடலில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை மாலை 6 முதல் இரவு 9 மணி வரை புதுவை கலை விழாவை நடத்துகின்றன.

இதில், குஜராத், உத்தரகாண்ட், ராஜஸ்தான், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல மாநில கலைக்குழுவினா், உள்ளூா் கலைக்குழுவினா் பங்கேற்கின்றனா். காரைக்கால் நகராட்சி திருமண மண்டபத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவா்கள் புகைப்படக் கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வரை இதை மக்கள் காணமுடியும். இந்த நிகழ்ச்சிகளில் மக்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றாா்.

அப்போது, மாவட்ட துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ் (வருவாய்), கலை பண்பாட்டுத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

SCROLL FOR NEXT