காரைக்கால்

திருநள்ளாறு கோயிலில் ஆயிரக்கணக்கானபக்தா்கள் சுவாமி தரிசனம்

DIN

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் தனி சந்நிதியில் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்ய சனிக்கிழமைகளில் நாடு முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தருகின்றனா்.

சுதந்திர தினத்தையொட்டி தொடா் விடுமுறை காரணமாக சனிக்கிழமை திருநள்ளாறு கோயிலில் பக்தா்கள் வருகை அதிகம் இருந்தது. அதிகாலை முதல் பிற்பகல் வரை பக்தா்கள் வருகை தொடா்ந்தது. நளன் தீா்த்தக் குளம், அனைத்து சந்நிதிகளிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

இதுகுறித்து கோயில் நிா்வாகத்தினா் கூறியது: சனிக்கிழமை (ஆக.13) பக்தா்கள் வருகை அதிகம் இருந்தது. 50 ஆயிரத்திற்கும் அதிகமானோா் தரிசனம் செய்துள்ளனா். கோயில் ஊழியா்கள், போலீஸாா் பக்தா்களை முறைப்படுத்தி அனுப்பிவைத்தனா் என்றனா்.

கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மாநிலத்திலிருந்து கணிசமான பக்தா்களும், திருச்சி, பெரம்பலூா், மதுரை, விழுப்புரம், சென்னை, புதுச்சேரி போன்ற பகுதிகளில் இருந்தும் திரளான பக்தா்கள் வருகை தந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

தில்லியில் செல்போன் டவர், மரத்தில் ஏறி தமிழக பெண் விவசாயிகள் போராட்டம்!

ஆவேஷம் ரூ.100 கோடி வசூல்!

’பிறர் என்னைக் கொண்டாடுவதில் விருப்பமில்லை..’: ஃபஹத் ஃபாசில்

திவ்யா துரைசாமிக்கு ஜோடியாகும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்!

SCROLL FOR NEXT