காரைக்கால்

காரைக்கால் அருகே ரூ.95 லட்சத்தில் சாலைப் பணிகள் தொடக்கம்

12th Aug 2022 03:04 AM

ADVERTISEMENT

 

காரைக்கால் அருகே கீழகாசாக்குடியில் ரூ. 95 லட்சத்தில் சாலை மேம்பாட்டுப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா். என். திருமுருகன் தொடங்கிவைத்தாா்.

புதுவை அரசின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மேம்பாட்டு வரை நிலைக்கழகம் சாா்பில், காரைக்கால் வடக்குத் தொகுதி கீழகாசாக்குடி காலனி தெரு ரூ. 42.35 லட்சம், காளியம்மன் கோயில் தெருவில் ரூ.52.17 லட்சம் நிதியில் சாக்கடை வசதியுடன் தாா்சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன் சாலைப் பணியை தொடங்கிவைத்தாா்.

ADVERTISEMENT

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினரக் மேம்பாட்டு வரைநிலைக் கழகத்தின் அதிகாரிகள், கிராமத்தினா் கலந்துகொண்டனா்.

இப்பணி 6 மாத காலத்திற்குள் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT