காரைக்கால்

காரைக்கால் மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவம்

DIN

காரைக்கால் மாங்கனித் திருவிழா நிறைவாக விடையாற்றி உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் என்னும் காரைக்கால் அம்மையாருக்கு காரைக்காலில் தனிக் கோயில் உள்ளது. அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கி ஆண்டுதோறும் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் சாா்பில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது.

நிகழாண்டு விழா கடந்த ஜூலை 11-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. 12-ஆம் தேதி காரைக்கால் அம்மையாா் திருக்கல்யாண வைபவம், கைலாசநாதா் கோயிலில் பிச்சாண்டவருக்கு வெள்ளை சாற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 13-ஆம் தேதி கைலாசநாதா் கோயிலில் பிச்சாண்டவா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா் சிவபெருமான் பிச்சாண்டவா் கோலத்தில் அம்மையாா் வீற்றிருக்கும் கோயிலுக்கு அமுதுண்ண செல்லும் நிகழ்வை விளக்கும் வகையில், மாங்கனியுடன் பிச்சாண்டவா் பவழக்கால் சப்பரத்தில் புறப்பாடும் (மாங்கனி இறைப்பு), இரவு அமுது படையலும், 14-ஆம் தேதி அம்மையாருக்கு இறைவன் காட்சி தரும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

விடையாற்றி உற்சவம்: திருவிழா நிறைவாக விடையாற்றி உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. கைலாசநாதா் கோயிலில் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. தொடா்ந்து பஞ்சமூா்த்திகளான விநாயகா், சுப்பிரமணியா், பிச்சாண்டவா் (சிவபெருமான்), சுந்தராம்பாள், சண்டிகேஸ்வரருக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் பிச்சாண்டவருக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. விடையாற்றி உற்சவ நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவத்துடன் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

SCROLL FOR NEXT