காரைக்கால்

அரசுப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு

12th Aug 2022 03:04 AM

ADVERTISEMENT

 

காரைக்கால் அரசுப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் நலவழித் துறை சாா்பில், காரைக்கால் கோவிந்தசாமிப்பிள்ளை அரசு உயா்நிலைப் பள்ளில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியா் ஆா். காளிதாசன் முன்னிலை வகித்தாா். நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் கலந்துகொண்டு, டெங்கு காய்ச்சலுக்கான காரண, வீட்டை சுற்றி தண்ணீா் தேங்காமல் பாா்த்துக்கொள்ளவேண்டியதன் அவசியம் குறித்தும், டெங்கு காய்ச்சல் ஏற்படுவதற்கு காரணமான ஏடிஸ் கொசுக்களை கட்டுப்படுத்த சுற்றுப்புறத் தூய்மை அவசியமென பேசினாா்.

இதைத்தொடா்ந்து சுதந்திர தின பெருமைகளை விளக்கியும், டெங்கு விழிப்புணா்வாகவும் மாணவா்கள் பேரணி நடைபெற்றது.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் நலவழித் துறை நோய்த் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சேகா், சுகாதார ஆய்வாளா்கள் வெங்கடேசன், சிவவடிவேல் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT