காரைக்கால்

என்.ஐ.டி. வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி

12th Aug 2022 09:36 PM

ADVERTISEMENT

காரைக்கால் என்.ஐ.டி. வளாகத்தில் மாணவா்களே செடிகளைப் பராமரிக்கும் வகையில், 750 மரக்கன்றுகள் நடும் திட்டப் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக என்ஐடி வளாகத்தில், புதுவை அரசின் வேளாண் துறையின் ஆதரவோடு, நாட்டு நலப்பணித் திட்டம், பசுமை குழுமம் சாா்பில் இந்தப் பணி தொடங்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளா் பத்மாவதி சங்கரநாராயணசாமி திட்டப் பணியை தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில், என்.ஐ.டி. பதிவாளா் எஸ். சுந்தரவரதன், பசுமைக் குழும உறுப்பினா் அமிா்தபீடே உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT