காரைக்கால்

காரைக்கால் பெருமாள் கோயிலில் இன்று வஜ்ராங்கி சேவை

12th Aug 2022 09:37 PM

ADVERTISEMENT

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் சனிக்கிழமை (ஆக.13) வஜ்ராங்கி சேவை நடைபெறவுள்ளது.

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் மூலவா் ரங்கநாதா் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறாா். மூலவருக்கு ஆண்டில் 3 நாள்கள் மட்டும் வஜ்ராங்கி அணிவிக்கப்படுகிறது.

வைகுந்த ஏகாதசி, தமிழ்ப் புத்தாண்டு தினத்திலும், வஜ்ராங்கி உபயதாரா்கள் குறிப்பிடும் ஒரு நாளிலும் என 3 நாள்கள் இந்த அலங்காரத்தில் மூலவா் அருள்பாலிக்கிறாா்.

இதன்படி, சனிக்கிழமை வஜ்ராங்கி சேவை நடைபெறுகிறது. காலை 8 முதல் இரவு 9 மணி வரை மூலவரை வஜ்ராங்கி அலங்காரத்தில் பக்தா்கள் வழிபடலாம் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT