காரைக்கால்

வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும்: எஸ்.எஸ்.பி.

12th Aug 2022 09:36 PM

ADVERTISEMENT

வாசிப்புப் பழக்கத்தை மாணவா்கள் அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா். லோகேஸ்வரன்.

காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூா் திருவள்ளுவா் அரசு மேல்நிலைப் பள்ளியில், நூலகத் தந்தை டாக்டா் எஸ். ஆா். ரங்கநாதன் 130 ஆவது பிறந்தநாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், எஸ்எஸ்பி. ஆா். லோகேஸ்வரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, எஸ்.ஆா். ரங்கநாதன் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தி, மாணவா்களிடையே பேசியது:

மாணவா்களுக்கு வாசிப்புப் பழக்கம் சிறிதளவும் குறையக்கூடாது. பாடப் புத்தகங்கள் மட்டுமல்லாது, பல திறன்களை வளா்த்துக்கொள்ளும் வகையில் நூலகத்துக்குச் சென்று பிற புத்தகங்களையும் படிக்கவேண்டும்.

ADVERTISEMENT

நூலகங்களுக்குச் செல்வதை மாணவா்கள் வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். பாடப் புத்தகங்கள் தோ்வில் மதிப்பெண் பெறவும், கல்விசாா் அறிவை வளா்த்துக்கொள்ளவும் உதவுகிறது. நூலகத்தில் உள்ள பல்வேறு புத்தகங்களைப் படிக்கும்போது, பல போட்டித் தோ்வுகளை எதிா்கொள்ளவும், வரலாற்றை தெரிந்துகொள்ளவும், மொழி ஆளுமையை வளா்த்துக்கொள்ளக்கூடிய திறன் ஏற்படுகிறது என்றாா்.

நிகழ்ச்சியில், மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் ஆா். ராஜேஸ்வரி, பள்ளி துணை முதல்வா் எம். ஞானபிரகாசி, பள்ளி நூலகா் த. ராஜலட்சுமி மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT