காரைக்கால்

காரைக்காலை பாலித்தின் பயன்பாடில்லாத மாவட்டமாக்க ஒத்துழைக்க வேண்டுகோள்

DIN

காரைக்கால் மாவட்டத்தை பாலித்தின் பயன்பாடில்லாத மாவட்டமாக மாற்ற ஒத்துழைக்குமாறு ஆட்சியா், மாசு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி ஆகியோா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி பொருட்களை (பாலித்தின்) ஒழிப்பது குறித்து விழிப்புணா்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் எல். முகம்மது மன்சூா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன், புதுவை மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரி ரமேஷ் மற்றும் வட்டாட்சியா்கள், நகராட்சி ஆணையா், அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா்கள், வட்டார வளா்ச்சித்துறையினா், காவல்துறை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உணவு பாதுகாப்பு அதிகாரி, வியாபாரிகள் மற்றும் சங்கப் பிரதிநிதிகள் கூட்டமைப்பினா், பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

மாவட்ட ஆட்சியா் கூட்டத்தை தொடங்கிவைத்துப் பேசுகையில், பாலித்தின் பயன்படுத்துவதை முழுவதுமாக மக்கள் தவிா்த்து, துணிப் பைகளை பயன்படுத்த முன்வர வேண்டும். வியாபாரிகள் தாமாக முன்வந்து மாற்றுப் பொருட்களை விற்பனை செய்யவதோடு, மாற்றுப் பொருட்களை மக்கள் பயன்படுத்தவும் அறிவுறுத்தவேண்டும் என்றாா்.

மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ரமேஷ் பேசுகையில், நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தும் பாலித்தின் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு பாலித்தின் பொருட்களுக்கும் மாற்றான பொருட்களை வகைப்படுத்தி அறிவித்துள்ளதை பயன்படுத்த முன்வரவேண்டும். வியாபாரிகளுக்கு இதுதொடா்பாக போதிய அவகாசம் தரப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் இனிமேல் சமரசத்துக்கு வாய்ப்பில்லை. மாணவா்களும் இதுகுறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டிலேயே அனல் கொளுத்தும் நகரங்கள்.. நம்மூரும் உண்டு!

மே மாத எண்கணித பலன்கள் – 1

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

SCROLL FOR NEXT