காரைக்கால்

கல்லூரி மாணவா்களின் சுதந்திர தின கலை நிகழ்ச்சிகள் தொடக்கம்

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சுதந்திர தினத்தை முன்னிட்டு, காரைக்காலில் தொடா் கலைநிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர முன்னிட்டு நடைபெறும் அமுதப் பெருவிழாவில் காரைக்கால் மாவட்ட நிா்வாகம் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள காமராஜா் திடலில் 9 முதல் 14-ஆம் தேதி வரை பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை இரவு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி, அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி மாணவ , மாணவிகள் பங்கேற்ற நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் தொடங்கிவைத்தாா். துணை ஆட்சியா்கள் எம். ஆதா்ஷ், எஸ். பாஸ்கரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவா்கள் முன்னிறுத்தி பொம்லாட்டம், கரகம், நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT