காரைக்கால்

‘மதச்சாா்பற்ற கூட்டணியோடு இணைந்து பணியாற்ற ரங்கசாமி முன்வர வேண்டும்’

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

புதுவை மக்களின் உரிமையை நிளைநாட்ட மதசாா்பற்ற கூட்டணியோடு இணைந்து முதல்வா் ரங்கசாமி பாடுபட வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் கூறியுள்ளாா்.

புதுவை முன்னாள் அமைச்சரும், மாநில காங்கிரஸ் மூத்த தலைவா்களில் ஒருவருமான ஆா். கமலக்கண்ணன் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:

புதுவை சட்டப்பேரவை துணைநிலை ஆளுநா் உரையுடன், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆளுநா் உரையின் மீது விவாதம், நிதிநிலை அறிக்கை தாக்கல் என்ற எதிா்பாா்ப்பு பொய்த்துவிட்டது. புதுவை தனி மாநில அந்தஸ்து பெற்றால் மட்டுமே, மாநில மக்களின் உரிமையை நிலைநாட்ட முடியும்.

புதுவையில் காங்கிரஸை அழிக்கும் நோக்கில் முழு பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி தராமல் இருந்தது. இப்போது பாஜக கூட்டணியில் என்.ஆா். காங்கிரஸ் இருந்தும் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் இல்லை என்கிறபோது, பாஜக கூட்டணியிலிருந்து ரங்கசாமி வெளியேறி, மதசாா்பற்ற கூட்டணியோடு இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும்.

ADVERTISEMENT

ஆளுநா் உரையில் தெரிவித்த திட்டங்கள் அனைத்தும் முந்தைய காங்கிரஸுன் திட்டங்கள். குறிப்பாக விவசாயத் திட்டங்கள் நான் வேளாண் அமைச்சராக இருந்தபோது அமலுக்கு வந்தவை. விவசாயிகள் வருமானம் முந்தைய காலத்தைவிட தற்போது குறைவாக இருக்கிறது. உரம் கிடைக்கவில்லை, உரத்தின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. கூட்டுறவு சங்க கடனை அரசு தள்ளுபடி செய்ததது. அதற்கான அரசாணை வெளியிடாததால் விவசாயிகள் கடன் பெற முடியாத நிலையில் தவிக்கின்றனா்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக புதுவை எந்த நிலையிலும் முன்னேற்றம் அடையவில்லை. இதுகுறித்து சரியான முடிவை முதல்வா் ரங்கசாமிதான் எடுக்கவேண்டும். தனி மாநில அந்தஸ்து பெற முடியாதபோது, கூட்டணியிலிருந்து வெளியேறுவதே சரியானதாக இருக்கும் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT