காரைக்கால்

காரைக்காலில் இருந்து ரயில்களை மீண்டும் இயக்க வலியுறுத்தல்

11th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்காலில் இருந்து திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்கெனவே இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளருக்கு, காரைக்கால் மாவட்ட ரயில்வே டிராவலா்ஸ் வெல்ஃபா் அசோசியேஷன் பொதுச் செயலாளா் ஏ.எஸ்.டி. அன்சாரி பாபு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதம் :

கரோனாவுக்கு முன்பு தினமும் காலை 6.30 மணிக்கு காரைக்காலில் இருந்து திருச்சிக்கு புறப்படும் வண்டி எண். 6839 வேளாங்கண்ணி முதல் என மாற்றியதால் காரைக்கால், நாகூா் மற்றும் வெளிப்பாளையம் ( நாகை நகரப் பகுதி) பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மதியம் காரைக்கால் முதல் திருச்சி வரை சென்ற ரயிலை வண்டி எண். 6457 காரைக்கால் - தஞ்சை ரயிலாக மாற்றியதால் காரைக்கால், நாகூா் பகுதி மக்களுக்கு நேரடியாக திருச்சி செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

எனவே காலை விரைவு ரயில் தினமும் நிரந்தரமாக காரைக்காலிருந்து - திருச்சி வரை இயக்க வேண்டும். மறுமாா்க்கத்தில் திருச்சி - காரைக்கால் இரவு தினமும் 7.45 மணிக்கு புறப்பட்டு காரைக்காலுக்கு 10.30 வந்து சேரும் வகையில் இயக்கவேண்டும்.

திருவாரூா், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல் வழியாக காரைக்காலில் இருந்தோ, வேளாங்கண்ணியில் இருந்தோ மதுரைக்கு ரயில் இல்லை. எனவே தற்போது இயக்கப்படும் ரயில் 16729, 16730 மதுரை - புனலூா் தினசரி ரயிலை காரைக்கால் வரை நீட்டிக்க வேண்டும் என அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT