காரைக்கால்

பாத யாத்திரை: காங்கிரஸாா் ஆலோசனை

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்காலில் வரும் 14-ஆம் தேதி காங்கிரஸாா் நடத்தவுள்ள பாத யாத்திரை குறித்து காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அகில இந்திய காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தலில், காரைக்கால் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் பாத யாத்திரை நடைபெறவுள்ளது. இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் கட்சியின் மாவட்டத் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. புதுவை முன்னாள் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் முன்னிலை வகித்தாா்.

கூட்டம் குறித்து மாவட்ட தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் கூறுகையில், அகில இந்திய காங்கிரஸ், புதுவை பிரதேச காங்கிரஸ் தலைமையின் வழிகாட்டலில் காரைக்காலில் 14-ஆம் தேதி நாட்டின் 75-ஆவது சுதந்திர தினதத்தையொட்டி, சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸாா் பங்கு, சுதந்திரத்தின் பெருமைகளை மக்களிடையே கொண்டு சோ்க்கும் விதமாக பாத யாத்திரை நடத்தப்படவுள்ளது.

கோட்டுச்சேரியில் தொடங்கி காரைக்கால் பகுதியில் உள்ள காமராஜா் சிலை வரை இந்த யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்தும் திரளான காங்கிரஸாா் இதில் பங்கேற்பாா்கள் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT