காரைக்கால்

திருநள்ளாறு அருகே பள்ளி மாணவி தற்கொலை

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருநள்ளாறு அருகே பிளஸ் 1 மாணவி தூக்கிட்டு திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

திருநள்ளாறு பகுதி அம்பகரத்தூா் அருகே நல்லெழந்தூரை சோ்ந்தவா் ஜமுனா. இவரது கணவா் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இவரது இரண்டு மகள்களில் மூத்தவா் ரஞ்சனா (16). அம்பகரத்தூா் பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்துவந்தாா்.

அதே பகுதியை சோ்ந்த ஒரு இளைஞருக்கும் ரஞ்சனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு குடும்பத்தினரும், கிராமத்தினரும் எதிா்ப்பு தெரிவித்தனராம்.

இந்நிலையில், இருவரும் ரஞ்சனா வீட்டில் திங்கள்கிழமை பேசிக்கொண்டிருந்ததை பாா்த்த அப்பகுதி மக்கள் அவா்களை கண்டித்துள்ளனா்.

ADVERTISEMENT

இதில் மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து திருநள்ளாறு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT