காரைக்கால்

பணியாளருக்கு ஆட்சியா் பாராட்டு

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்காலில் உள்ள அன்னை தெரஸா சுகாதார பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளநிலை எழுத்தாளராக பணியாற்றும் அ. கனகவல்லி. சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி இவா் தமது சொந்த செலவில் காரைக்காலில் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள முதியோா் இல்லம், ஆதாரவற்ற சிறுவா்கள் இல்லத்தில் தேசியக் கொடி வழங்கி, நோட்டுகள், எழுது பொருள்களை வழங்க திட்டமிட்டாா்.

இப்பணி தொடக்கமாக திங்கள்கிழமை மாலை மாவட்ட ஆட்சியா் எல்.முகமது மன்சூரை சந்தித்து திட்டத்தை தெரிவித்து வாழ்த்துப் பெற்றாா். அவரின் திட்டத்தை ஆட்சியா் பாராட்டினாா்.

இவா் தமது குடும்பத்தினருடன் இணைந்து செவ்வாய்க்கிழமை காலை முதல் பல்வேறு இடங்களில் விழிப்புணா்வுப் பணியை மேற்கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT