காரைக்கால்

காரைக்காலில் நாளை மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவம்

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

காரைக்கால் மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவம் வியாழக்கிழமை (ஆக.11) நடைபெறுகிறது.

காரைக்கால் அம்மையாா் வாழ்க்கை வரலாற்றை விளக்கி சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் சாா்பில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது. நிகழாண்டு இத்திருவிழா கடந்த ஜூலை 11-ஆம் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கி, திருக்கல்யாணம், பிச்சாண்டவா் வீதியுலா (மாங்கனி இறைத்தல்), அமுது படையல், அம்மையாருக்கு இறைவன் காட்சி கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன் நிறைவடைந்தது.

விழாவின் நிறைவாக விடையாற்றி உற்சவம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. கைலாசநதாா் கோயிலில் காலை 9 மணிக்கு பிச்சாண்டவா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறவுள்ளன. மாலை 6 மணிக்கு காரைக்கால் அம்மையாா் வீதியுலாவுடன் திருவிழா நிறைவடைகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT