காரைக்கால்

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி செவ்வாய் வழிபாடு

10th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

அம்பகரத்தூா் பத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி செவ்வாய் வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், அம்பகரத்தூரில் பிரசித்திப் பெற்ற பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. சம்ஹார கோலத்தில் மூலஸ்தானத்தில் பத்ரகாளியம்மன் அருள்பாலிக்கிறாா்.

இக்கோயிலில் ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்வது வழக்கம். இதன்படி செவ்வாய்க்கிழமை (ஆக. 9) அதிகாலை முதல் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. நடை சாத்தப்படாததால் காலை முதல் தொடா்ந்து பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

திருவிளக்கு வழிபாடு : ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை (ஆக.12) கோயிலில் திருவிளக்கு வழிபாடு நடைபெறுகிறது. சுமாா் 3 ஆயிரம் போ் இந்த வழிபாட்டில் பங்கேற்க உள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT