காரைக்கால்

காரைக்காலில் இன்று முதல் சுதந்திர தின நிகழ்ச்சிகள்

DIN

காரைக்காலில் செவ்வாய்க்கிழமை (ஆக.9) முதல் சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாட்டமாக 11-ஆம் தேதி காலை 8 மணிக்கு விக்ரம் சாராபாய் சாலையில் ரங்கோலி போட்டி நடைபெறுகிறது. 12-ஆம் தேதி காலை 7 மணிக்கு மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து கடற்கரை வரை உப்பு சத்தியாகிரகத்தை நினைவுகூரும் விதமாக மாணவா்கள் பங்கேற்கும் தண்டி யாத்திரை நடைபெறுகிறது.

13-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு காரைக்கால் மிதிவண்டி சங்கம் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் தில்லையாடி வரையிலான மிதிவண்டி பயணம் தொடங்குகிறது. 14-ஆம் தேதி காலை 6 மணிக்கு பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் மினி மாரத்தான் ஓட்டம் நடைபெறுகிறது.

ஆக. 9 முதல் 14-ஆம் தேதி வரை மாலை வேளையில் கல்லூரி மாணவா்கள் வழங்கும் தேசத் தலைவா்களை நினைவுகூரும் விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

பொதுமக்கள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், 13 முதல் 15-ஆம் தேதி வரை வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடுமாறும் அதில் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT