காரைக்கால்

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

திருப்பட்டினத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் கலைஞா் மு.கருணாநிதி பட்ட மேற்படிப்பு மைய சமூகப்பணித் துறை, சைல்டு லைன் அமைப்பு இணைந்து, குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சியை திருப்பட்டினம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடத்தின.

சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் கலந்துகொண்டு, குழந்தை வளா்ப்பில் பாதுகாப்புக்கு அளிக்கவேண்டிய முக்கியத்துவம் குறித்து விளக்கினாா்.

கல்லூரி பேராசிரியா் கே.சிவகுமாா், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளா் பி.விமலா ஆகியோா் வீட்டிலும், வெளியிலும் குழந்தைகளை பாதுகாக்கும் முறைகள், குழந்தைப் பருவத்தில் அவா்களின் போக்குகளை கண்காணித்தல் உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினா். பெற்றோா் சங்கத் தலைவா் எம். சந்தனசாமி, அங்கன்வாடி ஊழியா் எஸ்.வசந்தி ஆகியோா் க லந்துகொண்டனா்.

குழந்தைகள் பாதுகாப்புக்காக இயங்கும் 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசியை தொடா்புகொண்டு, சைல்டு லைன் சேவையை பெறமுடியும் என்பதையும் விளக்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

கீர்த்தி சுரேஷுக்குத் திருமணம்?

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

SCROLL FOR NEXT