காரைக்கால்

அரசு ஊழியா்களைபணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

7th Aug 2022 09:52 PM

ADVERTISEMENT

 

சட்டப்பேரவையில் அறிவித்தபடி தினக்கூலி ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் பிரதேச அரசு ஊழியா் சங்கங்களின் சம்மேளன செயற்குழு கூட்டம் தலைவா் சுப்ரமணியன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், சட்டப்பேரவையில் முதல்வா் அறிவித்தபடி, கல்வி நிலையங்களில் பணிபுரியும் ரொட்டி பால் ஊழியா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமான ரூ.10 ஆயிரத்தை உடனடியாக வழங்கவேண்டும்.

ADVERTISEMENT

10 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலி ஊழியா்களாக பணியாற்றிவரும் அனைத்து துறை ஊழியா்களையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும்.

வேளாண் அறிவியல் நிலைய ஊழியா்களுக்கு வெளியிடப்பட்ட 7-ஆவது ஊதியக்குழு அரசாணைப்படி, தினக்கூலி ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு புதிய ஊதியத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நிா்வாக குழு உறுப்பினா்கள் ஜாா்ஜ், கஸ்பா், தமிழ்வாணன், சந்தனசாமி, திவ்யநாதன், புகழேந்தி, ஞானவேல், நாகராஜன், காரைக்கால் ஒருங்கிணைந்த ஆசிரியா் நலச்சங்க தலைவா் ஜான் பிரிட்டோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT