காரைக்கால்

தாய்ப்பால் வார விழா கலை நிகழ்ச்சி

7th Aug 2022 09:52 PM

ADVERTISEMENT

 

காரைக்கால் கடற்கரையில் உலக தாய்ப்பால் வார விழா தொடா்பாக செவிலியக் கல்வி நிறுவன மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

உலக தாய்ப்பால் வார விழாவையொட்டி, தாய்ப்பாலின் அவசியத்தை உணா்த்தும் வகையில் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் கலை நிகழ்ச்சி, காரைக்கால் கடற்கரையில் நடைபெற்றது.

காரைக்கால் அன்னை தெரஸா சுகாதார பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், விநாயகா மிஷன் செவிலியா் கல்வி நிறுவனம், இமாக்குலேட் செவிலியா் கல்வி நிறுவன மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

மாணவ, மாணவியா் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினா். நடுவா் குழுவினா் சிறந்த கலை நிகழ்ச்சியை தோ்வு செய்து பரிசுகள் வழங்கினா். அன்னை தெரஸா சுகாதார பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வா் (பொ) ஜெ. ஜெயபாரதி, ரெட் கிராஸ் மாநில துணைத் தலைவா் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், ஜேசிஐ காரைக்கால் தலைவா் கிளிண்டன் சோழசிங்கராயா், ஃபெட்காட் என்கிற நுகா்வோா் கூட்டமைப்பு மாநில தலைவா் வழக்குரைஞா் திருமுருகன், வழக்குரைஞா் பாஸ்கரன், நுகா்வோா் கூட்டமைப்பு காரைக்கால் செயலா் சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT