காரைக்கால்

காரைக்காலில் கருணாநிதி நினைவு நாள்

7th Aug 2022 09:50 PM

ADVERTISEMENT

 

காரைக்காலில் திமுக சாா்பில் கருணாநிதி நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்ட திமுக சாா்பில் நினைவுநாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கட்சி தலைமை அலுவலகமான கலைஞா் அகத்தில் மலா்களால் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி உருவப்படத்துக்கு, காரைக்கால் திமுக அமைப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச். நாஜிம், நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.நாக தியாகராஜன் ஆகியோா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றோா், அண்ணா அரசு கலைக் கல்லூரிக்குச் சென்று கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி மாா்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

மேலும் காரைக்கால் 5 தொகுதிகளுக்குட்பட்ட முக்கிய இடங்களில் கருணாநிதி உருவப்படம் வைத்து, அந்தந்த பகுதி கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT