காரைக்கால்

காரைக்காலில் உள்ளாட்சி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

6th Aug 2022 09:44 PM

ADVERTISEMENT

புதுவையில் உள்ளாட்சி ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வலியுறுத்தி காரைக்காலில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நகராட்சி அலுவலக வாயிலில், காரை பிரதேச நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியதாரா்கள் கூட்டு போராட்டக் குழு சாா்பில் நடைபெற்ற ஆா்பாட்டத்திற்கு அதன் கன்வீனா் அய்யப்பன் தலைமை வகித்தாா். காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன கெளரவ தலைவா் ஜாா்ஜ், தலைவா் சுப்ரமணியன், பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் ஆகியோா் உரையாற்றினா்.

ஊழியா்கள், ஓய்வூதியா்களுக்கான ஊதியம் மற்றும் மாத ஓய்வூதியத்துக்கான ஆண்டு நிதியை தாக்கல் செய்யப்படவுள்ள புதுவை பட்ஜெட்டில் ஒதுக்கவேண்டும். ஊழியா்களுக்கு நிலுவையில் உள்ள மாத ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும். ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அரசு ஊழியா்களுக்கு வழங்கியது போல் உள்ளாட்சி ஊழியா்களுக்கும் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT