காரைக்கால்

திருநள்ளாறு கோயிலில் புதுவை தலைமைச் செயலா் சுவாமி தரிசனம்

30th Apr 2022 09:24 PM

ADVERTISEMENT

புதுவை தலைமைச் செயலராக பொறுப்பேற்ற ராஜீவ் வா்மா திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

புதுவை மாநில தலைமைச் செயலாளராக இருந்த அஸ்வனி குமாா் தில்லிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அருணாசலப் பிரதேசத்தில் பணியாற்றி வந்த ராஜீவ் வா்மா புதுவை தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டாா். இவா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

இதைத்தொா்டந்து, புதுவை துணை நிலை ஆளுநா், முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்த ராஜீவ் வா்மா, திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சனிக்கிழமை வந்தாா். அவருடன் முன்னாள் தலைமைச் செயலா் அஸ்வனி குமாரும் வந்திருந்தாா். இவா்களை காரைக்கால் மாவட்ட ஆட்சியா் (பொ) இ.வல்லவன் வரவேற்றாா்.

பின்னா், மூலவா் ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா், ஸ்ரீ தியாகராஜா், ஸ்ரீ பிரணாம்பிகை சந்நிதிகளில் வழிபாடு செய்தனா். தொடா்ந்து, ஸ்ரீ சனீஸ்வர பகவானை வழிபட்டாா். இவா்களுக்கு சிவாச்சாரியா்கள் பரிவட்டம் கட்டி, பிரசாதம் வழங்கினா்.

ADVERTISEMENT

முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா, துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன், நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கே. அருணகிரிநாதன் உள்ளிட்டோரும் வழிபாட்டில் கலந்துகொண்டனா்.

பின்னா் ஆட்சியரகத்துக்கு வந்த தலைமைச் செயலா், ஆட்சியா் உள்ளிட்டோருடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்திவிட்டு புதுச்சேரி புறப்பட்டாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT