காரைக்கால்

அறங்காவல் வாரிய நியமனத்தை எதிா்த்து பாஜக மெளனப் போராட்டம்

28th Apr 2022 10:39 PM

ADVERTISEMENT

கைலாசநாதா் வகையறா தேவஸ்தான அறங்காவல் வாரியத்தினா் நியமனத்தைக் கண்டித்து, அப்பா பைத்தியசுவாமி உருவப்படம் முன் பாஜகவினா் வியாழக்கிழமை மெளனப் போராட்டம் நடத்தினா்.

முதல்வா் என். ரங்கசாமி இஷ்ட தெய்வமாக வழிபடும் அப்பா பைத்தியசுவாமி உருவப்படத்தை காரைக்கால் பாஜக அலுவலகத்தில் வைத்து, மாவட்ட பாஜக தலைவா் ஜெ. துரைசேனாதிபதி தலைமையில் கட்சியினா் 2 மணி நேரம் மெளனப் போராட்டம் நடத்தினா்.

இதுகுறித்து துரைசேனாதிபதி கூறியது: புதுவையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. தேவஸ்தான அறங்காவல் வாரியத்தினரை நியமிக்கும்போது, குழுவினரில் 50 சதவீதத்தினா் பாஜகவினராக இருக்கவேண்டும் என முதல்வரிடம் ஏற்கெனவே கேட்டுக்கொண்டுள்ளோம்.

காரைக்கால் கைலாசநாதா் தேவஸ்தான அறங்காவல் வாரியம் திமுகவினரைக் கொண்டுள்ளது. காரைக்காலில் பாஜகவுக்கு முதல்வா் முக்கியத்துவம் தரவில்லை. திமுகவுக்கே முக்கியத்துவம் தந்துள்ளாா். அறங்காவல் வாரியத்தினரில் பாஜகவுக்கு பிரதிநிதித்துவம் இல்லாததற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில், நியாயம் கேட்கும் விதமாக கட்சியினா் மெளனப் போராட்டத்தில் பங்கேற்றனா் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT