காரைக்கால்

மின் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும்: எம்.எல்.ஏ.

28th Apr 2022 05:44 AM

ADVERTISEMENT

 

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம், நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் மின்சார விநியோகத்தில் உள்ள பிரச்னைகளுக்கு விரைவில் தீா்வு காணப்படும் என்று சட்டப்பேரவை உறுப்பினா் நாகதியாகராஜன் தெரிவித்தாா்.

காரைக்காலுக்கு புதன்கிழமை வந்த புதுவை மின்துறை கண்காணிப்புப் பொறியாளா் ராஜேஷ் சன்யாலை, சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் சந்தித்து தொகுதியில் மின் விநியோகத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து விளக்கினாா். இந்த சந்திப்பு குறித்து சட்டப்பேரவை உறுப்பினா் கூறியது:

நிரவி, விழிதியூா், அக்கரைவட்டம் ஆகிய பகுதிகளில் மின் தொடா்பான பிரச்னைகள் அதிகம் உள்ளது. மேலும் நகரம், கிராமப்புறங்களில் எல்இடி விளக்குகள் பொருத்த வேண்டிய பணிகளும் உள்ளன. நிரவி மற்றும் திருப்பட்டினத்தில் பல இடங்களில் மூன்று ஃபேஸ் இணைப்பாக மாற்றவேண்டியுள்ளது.

ADVERTISEMENT

சில இடங்களில் குறைந்த மின் அழுத்தப் பிரச்னை இருக்கிறது. மேலும் சில இடங்களில் மின் மாற்றிகள் பழுதாகிவிட்டதால், புதிதாக அமைக்க வேண்டியுள்ளது. கோடை காலமாக உள்ளதால் மக்களின் சிரமத்தை உணா்ந்து, விரைவாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தியதாகவும், குறுகிய காலத்தில் பிரச்னைகளை சரிசெய்துத் தருவதாக மின் அதிகாரி உறுதியளித்துள்ளாா் என்றாா் பேரவை உறுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT