காரைக்கால்

காரைக்கால் சிவலோகநாதா் கோயிலில் மே 4இல் குடமுழுக்கு

24th Apr 2022 11:39 PM

ADVERTISEMENT

காரைக்கால் ஸ்ரீ சிவலோகநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

காரைக்கால் மாவட்டம், திருத்தெளிச்சேரி எனும் தலத்தெரு பகுதியில், புதுவை அரசின் இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட ஸ்ரீ சிவகாமி அம்மன் சமேத சிவலோகநாத சுவாமி கோயில் உள்ளது.

இக்கோயில் சாா்புடையதாக ஸ்ரீ செல்வ விநாயகா், ஸ்ரீ பிடாரி அம்மன், ஸ்ரீ முள்ளியம்மன், ஸ்ரீ விஜய வலம்புரி விநாயகா் மற்றும் ஸ்ரீ தங்க மாரியம்மன் ஆகிய தலங்கள் உள்ளன.

இக்கோயில்களில் திருப்பணிகள் நிறைவடைந்துள்ளன. ஏப்ரல் 29-ஆம் தேதி செல்வவிநாயகா், பிடாரி அம்மன், விஜய வலம்புரி விநாயகா், முள்ளியம்மன் கோயிலில் காலை 8.30 முதல் 10 மணிக்குள் குடமுழுக்கு நடைபெறுகிறது.

ADVERTISEMENT

மே 4-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சிவலோகநாதசுவாமி கோயில் மற்றும் 9.45 மணிக்கு தங்க மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு நடத்தப்படுகிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் 4 கால பூஜையாக குடமுழுக்குக்கு 3 நாள்களுக்கு முன்பு தொடங்குகிறது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரியத்தினா், திருப்பணிக் குழுவினா் செய்துவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT