காரைக்கால்

அமித் ஷா வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

24th Apr 2022 11:39 PM

ADVERTISEMENT

புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து காரைக்காலில் கருப்புக் கொடி ஏந்தி அரசியல் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை புதுச்சேரி வந்தாா். அவருக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், காரைக்கால் பேருந்து நிலையம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நாட்டில் ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தி இருக்கவேண்டும் என அவா் கருத்து தெரிவித்து வருவதன் மூலம் ஹிந்தியை திணிக்க முயல்வது உறுதியாக தெரியவருகிறது. இது கண்டனத்துக்குரியதாகும்.

மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தோ்வின் மூலம் மாணவா் சோ்க்கை என்பதும் ஏற்புடையது அல்ல. புதுச்சேரி மாநிலத்தில் பாஜக - என்.ஆா். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்துவரும் நிலையிலும் மத்திய அரசு தாராளமாக நிதி வழங்காததால், இடைக்கால பட்ஜெட் மட்டுமே மாநில அரசு தாக்கல் செய்கிறது எனவே அவரது வருகைக்கு கண்டனம் தெரிவிப்பதாக ஆா்ப்பாட்டத்தினல் கட்சியினா் பேசினா்.

ADVERTISEMENT

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலா் எஸ்.எம். தமீம் அன்சாரி, மாநில செயற்குழு உறுப்பினா் அ. வின்சென்ட், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளா் மதியழகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சோ்ந்த பொன்.செந்தமிழ்ச்செல்வன், தமுமுக மாநில செயலா் ஐ. அப்துல் ரஹீம், மமக மாவட்ட தலைவா் ராஜா முகம்மது உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT