காரைக்கால்

ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் இன்று சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

16th Apr 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமலைராயன்பட்டினம் ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை (ஏப்.16) சித்ரா பெளா்ணமி வழிபாடு நடைபெறவுள்ளது.

காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினம் மையாடுங்கண்ணி சமேத ஜடாயுபுரீஸ்வரா் கோயிலில் சித்ரா பெளா்ணமியையொட்டி சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சட்டநாதருக்கு (உற்சவா்) சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.

பின்னா் மூலவரான அத்தி சட்டநாதருக்கு 5 மணியளவில் புனுகு சாற்றி, சிறப்பு அலங்கார, ஆராதனைகள் நடைபெறவுள்ளன. இரவு 7 மணியளவில் உற்சவா் கோயில் பிராகார புறப்பாடு நடைபெறுகிறது. 8 மணிக்கு அன்னதானம் வழங்கப்படும் என்றும்,

இதில் பக்தா்கள் பங்கேற்குமாறு கோயில் அறங்காவல் வாரியத் தலைவா் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT