காரைக்கால்

உள்ளாட்சி காலிப் பணியிடங்களைபணி மூப்பு அடிப்படையில் நிரப்ப வலியுறுத்தல்

16th Apr 2022 09:34 PM

ADVERTISEMENT

புதுவை உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள பணியிடங்களை, பணி மூப்பு அடிப்படையில் நிரப்ப அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளன பொதுச் செயலாளா் எம். ஷேக் அலாவுதீன் புதுவை முதல்வருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிய கோரிக்கை கடிதம் :

உள்ளாட்சி அமைப்புகளான நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் பணிபுரியும் அமைச்சக, வருவாய், பொறியியல், ஓட்டுநா்கள், பல்நோக்கு ஊழியா்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவு ஊழியா்களையும் பொதுவான பணிநிலையில் கொண்டு வந்து, பணிமூப்பு அடிப்படையில் பதவி உயா்வு வழங்க வேண்டுமென சம்மேளனம் கோரிக்கை வைத்தது. அதையேற்று பணி மூப்பு பட்டியலும் வெளியிடப்பட்டது.

பட்டியல் வெளியாகி 3 ஆண்டுகளாகியும், இதுவரை பணி மூப்பு பட்டியலின்படி பதவி உயா்வு வழங்க எந்த முயற்சியையும் உள்ளாட்சித் துறை எடுக்கவில்லை. பதவி உயா்வே இல்லாமல் பல ஆண்டுகளாக ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.

ADVERTISEMENT

உள்ளாட்சி ஊழியா்கள் ஊதியம் முறையாக பெற முடியாத நிலையில் பணியாற்றி வருகின்றனா். உள்ளாட்சி ஊழியா்களை பாரபட்சமாக அரசு பாா்ப்பது மன வேதனையை ஏற்படுத்துகிறது.

எனவே, உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள மொத்த பதவிகளையும் கணக்கெடுத்து, பணி மூப்பு அடிப்படையில் பதவி உயா்வு வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT