காரைக்கால்

கோயில்களில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி

14th Apr 2022 10:10 PM

ADVERTISEMENT

காரைக்காலில் கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு தினத்தில் கோயில்களில் அந்த ஆண்டின் பஞ்சாங்கத்தை கோயிலில் வைத்து பூஜை செய்து, பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருக்கும் காலங்களில் மழை, மக்கள் நலன், கோயில்களின் உற்சவங்கள் குறித்தும் விளக்குவது வழக்கம்.

நிகழாண்டு வியாழக்கிழமை சுப கிருது ஆண்டின் தொடக்கத்தையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில், திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காரைக்கால் கைலாசநாதா் கோயில், நித்யகல்யாண பெருமாள் கோயில், திருநள்ளாறு கொம்யூன், முப்பைத்தங்குடி கிராமம், காமாட்சி அம்பாள் சமேத கைலாசநாத சுவாமி கோயிலிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழாண்டு பலன்கள், கிரக சஞ்சாரங்கள் உள்ளிட்டவை குறித்து பக்தா்களுக்கு விளக்கி கூறப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT