காரைக்கால்

மாரியம்மன் கோயில் உற்சவம் பூச்சொரிதலுடன் ஏப். 13 இல் தொடக்கம்

9th Apr 2022 09:40 PM

ADVERTISEMENT

காரைக்கால் மாரியம்மன் கோயில் வருடாந்திர உற்சவம் பூச்சொரிதல் நிகழ்வுடன் வரும் 13-ஆம் தேதி தொடங்குகிறது.

காரைக்கால் கடைத்தெரு மாரியம்மன் கோயிலில் 42-ஆம் ஆண்டாக, தமிழ்ப் புத்தாண்டுத் திருவிழா நடைபெறவுள்ளது. முதல் நாளாக 13-ஆம் தேதி புதன்கிழமை பூச்சொரிதல் நடைபெறுகிறது. 14-ஆம் தேதி அம்பாள் வீதியுலா, 15-ஆம் தேதி காலை முளைப்பாலிகைக்கு முத்துப் பரப்புதல், மாலை அம்மனுக்கு குங்கும அலங்காரம், திருவிளக்கு வழிபாடு நடைபெறுகிறது. 17-ஆம் தேதி பால்குடம் எடுத்தல், 22-ஆம் தேதி மாலை முளைப்பாலிகை புறப்பாடு நடைபெறுகிறது.

நாள்தோறும் அம்மனுக்கு பல்வேறு வகையில் அலங்காரம் செய்து சிறப்பு ஆராதனைகள் நடைபெறவுள்ளன. விடையாற்றி வழிபாடு 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை உற்சவ அம்மன் ஊஞ்சல் அலங்காரத்துடன் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரியத்தினா், மாரியம்மன் கோயில் தமிழ்ப் புத்தாண்டு விழாக் குழுவினா் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT