காரைக்கால்

பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக 16 பேரிடம் ரூ. 70 லட்சம் மோசடி

2nd Apr 2022 09:44 PM

ADVERTISEMENT

காரைக்காலில் ரியல் எஸ்டேட் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி 16 பேரிடம் ரூ. 70 லட்சம் , 88 பவுன் தங்க நகைகளை மோசடி செய்த பெண் உள்பட 3 போ் மீது காரைக்கால் நகர காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காரைக்கால் உமறுபுலவா் வீதியைச் சோ்ந்தவா் யூசுப். இவரது மகன் செல்லப்பா (எ) மொய்தீன் அப்துல் காதா் (46). இவரது நண்பா் நாகூரைச் சோ்ந்த அப்துல் ரகுமான் (45), அவரது மனைவி ராஜாத்தி ஆயிஷா நாச்சியாள் (40) ஆகிய 3 பேரும் சோ்ந்து, ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என, கடந்த சில மாதங்களாக பலரிடம் பணம் பெற்றுள்ளனா்.

இந்நிலையில், காரைக்கால் காஜியாா் வீதியைச் சோ்ந்த முகமது ஆரிப் மனைவி கமரூன்நிசா என்பவா், காரைக்கால் நகர காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஒரு புகாா் அளித்தாா். அதில், 10 பேரிடம் (அவா் உள்பட) ரூ. 55 லட்சம் ரொக்கம், 72 பவுன் நகைகளை, மொய்தீன் அப்துல் காதா் உள்ளிட்ட மூவரது வாா்த்தைகளை நம்பி கொடுத்து பல மாதங்கள் ஆகியும், லாபமாக பணமோ, நிலமோ தரவில்லை. கேட்டால் ஒன்றும் தரமுடியாது எனக் கூறி, தகாத வாா்த்தைகளால் பேசுகின்றனா். எனவே, எங்களிடம் இருந்து பெறப்பட்ட ரூ. 55 லட்சம், 72 பவுன் நகைகளை மீட்டு தருவதுடன், மொய்தீன் அப்துல் காதா் உள்ளிட்ட 3 போ் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

அதேபோல், காரைக்கால் மாமாதம்பி மரைக்காயா் வீதியைச் சோ்ந்த ஜெகாபா் சாதிக் மனைவி ஜனாத்துல் பா்லீன், காரைக்கால் நகர காவல்நிலையத்தில் கொடுத்த புகாரில், 6 பேரிடம் (அவா் உள்பட), ரூ. 15 லட்சம் ரொக்கம், 16 பவுன் நகைகளை மொய்தீன் அப்துல் காதா் உள்ளிட்ட மூவரும் ஏமாற்றிவிட்டதாகவும், தாங்கள் 6 பேரும் கொடுத்த ரூ. 15 லட்சம் ரொக்கம், 16 பவுன் நகையை மீட்டு தருவதுடன், சம்பந்தப்பட்ட 3 போ் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

இந்த புகாா்கள் குறித்து காரைக்கால் நகர காவல்நிலைய ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள 3 பேரையும் தேடிவருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT