காரைக்கால்

நெல் கொள்முதல் விவகாரம்: நீதிமன்ற உத்தரவுக்கு விவசாயிகள் சங்கம் வரவேற்பு

30th Sep 2021 09:09 AM

ADVERTISEMENT

புதுவையில் இந்திய உணவுக் கழகம் நெல் கொள்முதல் செய்யவேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு விவசாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காரை பிரதேச விவசாயிகள் சங்கத் தலைவா் வழக்குரைஞா் எஸ்.பி.எஸ். நாதன் புதன்கிழமை கூறியது:

காரைக்கால் மாவட்டத்தில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை குறைந்தபட்ச ஆதார விலைக்கு விற்க முடியாத நிலை உள்ளது. காரைக்காலில் இந்திய உணவுக் கழக கிடங்குகள் உள்ளன. மாநில அரசின் கூட்டுறவு நிறுவன கிடங்குகளும் உள்ளன. நெல் கொள்முதல் செய்யக்கூடிய கட்டமைப்புகள் இருந்தும் புதுவை அரசு, இந்திய உணவுக் கழகம் நெல் கொள்முதல் செய்வதில்லை.

இதனால் தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்று, விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனா். இதை சுட்டிக்காட்டி சென்னை உயா்நீதிமன்றத்தில் விவசாயிகள் சங்கம் சாா்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

ADVERTISEMENT

வழக்கில் அனைத்து தரப்பு கருத்துகளையும் கேட்டறிந்த சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தோஷ் பானா்ஜி, கடந்த 21ஆம் தேதி அளித்த தீா்ப்பில், புதுவை பிரதேசங்களில் இந்திய உணவுக் கழகம் நெல் கொள்முதல் செய்யவேண்டும் என உத்தரவிட்டாா்.

நீதிமன்றத்தின் இந்த தீா்ப்பு வரவேற்புக்குரியது. இதனால் தற்போது குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் இந்திய உணவுக் கழகத்திடம் நெல்லை விற்று பயனடையமுடியும். எனவே, இந்திய உணவுக் கழகம் விரைவில் நெல் கொள்முதல் செய்யும் பணியை தொடங்கவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT