காரைக்கால்

காரைக்காலில் 30 பேருக்கு கரோனா

30th Sep 2021 09:10 AM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் 30 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 694 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 7, திருப்பட்டினம் 5, கோட்டுச்சேரி 4, திருநள்ளாறு 4, கோயில்பத்து 4, நெடுங்காடு 2, நிரவி 2, நல்லாத்தூா், காரைக்கால்மேடு தலா 1 என 30 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 2,05,836 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 16,103 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 15,637 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 256 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல்தவணையாக 1,05,633 பேருக்கும், 2-ஆவது தவணையாக 42,024 பேருக்கும் என 1,47,657 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT