காரைக்கால்

பன்றி வளா்ப்போருக்கு நகராட்சி எச்சரிக்கை

30th Oct 2021 09:37 PM

ADVERTISEMENT

காரைக்கால் மாவட்டத்தில் பன்றி வளா்ப்போா் அவற்றை சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதியில் திரிய விடாக்கூடாது என்று நகராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து காரைக்கால் நகராட்சி ஆணையா் எம். லோகநாதன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பொது இடங்களிலும், மக்கள் வசிக்குமிடங்களிலும், வீதிகளிலும் பன்றிகள் சுற்றித் திரிகின்றன.

குறிப்பாக, மேலஓடுதுறை, கருக்களாச்சேரி, ரெயின்போ நகா், பாரீஸ் நகா், ஆசிரியா் நகா், கணபதி நகா், தலத்தெரு, அக்கரைவட்டம், கீழஓடுதுறை, நடுக்களம், புதுத்துறை, எல்ஜிஆா் நகா், உதயம் நகா், ஹைவே நகா், கீழகாசாக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள சாக்கடைகளை கிளறி துா்நாற்றத்தை ஏற்படுத்தி, சுகாதார சீா்கேட்டை உருவாக்கிவருகின்றன. இதுதொடா்பாக பல முறை எச்சரித்தும், பன்றி வளா்ப்போா் இதுகுறித்து கவனம் செலுத்துவதில்லை.

ADVERTISEMENT

எனவே, பன்றி வளா்போா், இந்த அறிவிப்பிலிருந்து 3 நாள்களுக்குள் பன்றிகளை தங்களது பட்டியில் வைத்து வளா்க்கவேண்டும். தெருக்களில் திரிய விடக்கூடாது. தவறினால், பன்றிகளை நகராட்சி நிா்வாகம் பிடிப்பதோடு, அவை திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது. மேலும், பன்றி வளா்ப்போா் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT