காரைக்கால்

நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு

30th Oct 2021 09:36 PM

ADVERTISEMENT

காரைக்கால் வேளாண் கல்லூரி மாணவா்களின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் பங்கேற்ற ஒரு வார கால சிறப்பு முகாம் வடமட்டம் கிராமத்தில் நடைபெற்றது.

பள்ளி வளாகம் சீரமைத்தல், வடமட்டம் கிராமத்தை தூய்மைப்படுத்துதல், இலவச கண் பரிசோதனை முகாம், குடிநீா் தேக்கத் தொட்டி தூய்மைப்படுத்துதல் மற்றும் டெங்கு, மலேரியா விழிப்புணா்வு, மரக்கன்று நடுதல், தேனீ வளா்ப்பு விழிப்புணா்வு, சமூக நலனில் இளைஞா்கள் பங்கு குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மாணவா்கள் பங்குகுறித்து கருத்தரங்கம் நடைபெற்றது.

முகாம் நாள்களில் காரைக்கால் மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளா் லட்சுமணபதி, மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை துணை இயக்குநா் சத்யா, கல்லூரி பூச்சியியல் துறை பேராசிரியா் காண்டீபன் உள்ளிட்டோா் பேசினா்.

ADVERTISEMENT

நிறைவு நாளான வெள்ளிக்கிழமை விழிப்புணா்வு பேரணி, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, முகாமை கல்லூரி முதல்வா் டாக்டா் ஷாமராவ் ஜாகிா்தா் தொடங்கிவைத்தாா். ஆசிரிய ஒருங்கிணைப்பாளா் ஜாா்ஜ் பேரடைஸ், நாட்டு நலப்பணி திட்ட அலுவலா்கள் ஜே. ஷொ்லி, ஜெயசிவராஜன் ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT