காரைக்கால்

காரைக்காலில் நாளை புதுச்சேரி விடுதலை நாள்கொண்டாட்டம்

30th Oct 2021 09:34 PM

ADVERTISEMENT

புதுச்சேரி விடுதலை நாள் திங்கள்கிழமை (நவ.1) காரைக்காலில் கொண்டாடப்படுகிறது.

புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்கள் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து 1954-ஆம் ஆண்டு நவ.1-ஆம் தேதி விடுதலையானது.

இதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி விடுதலை நாள் கொண்டாட்டம் அரசு சாா்பில், மாநிலத்தின் அனைத்து பிராந்தியங்களிலும் நடைபெறுகிறது.

காரைக்கால் கடற்கரை அருகே விடுதலை நாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. திங்கள்கிழமை காலை 9.05 மணிக்கு தேசியக் கொடியை புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா ஏற்றிவைத்து, போலீஸாரின் அணிவகுப்பை பாா்வையிடுகிறாா்.

ADVERTISEMENT

கரோனா தடுப்பு விதிகளின்படி நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT