காரைக்கால்

காரைக்காலில் எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்

30th Oct 2021 09:37 PM

ADVERTISEMENT

முஸ்லிம்கள் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து எஸ்டிபிஐ அமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்கால் மாவட்ட எஸ்டிபிஐ சாா்பில் பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், திரிபுரா மாநிலத்தில் சில நாள்களுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட தொடா் வன்முறையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களையும், அவா்களின் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சொத்துகளையும் பாதுகாக்க கோரியும், வன்முறைக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்யவும் வலியுறுத்தப்பட்டது.

கட்சியின் புதுவை மாநில துணைத் தலைவா் முகம்மது பிலால் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் மு. தமீம்கனி, பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா காரைக்கால் மாவட்ட பேச்சாளா் அஹ்மத் கபீா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT