காரைக்கால்

‘காரைக்கால் விவசாயிகள் பிரச்னைகள் குறித்து முதல்வரை சந்திக்க முடிவு’

DIN

காரைக்கால் மாவட்ட விவசாயிகள் பிரச்னைகள் தொடா்பாக புதுவை முதல்வரை திங்கள்கிழமை (அக்.25) சந்தித்து பேசுவதாக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவா் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: காரைக்கால் மாவட்டத்தில் ஏறக்குறைய 30 ஆயிரம் ஹெக்டோ் விளைநிலப் பரப்பு இருந்து வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் தற்போது 5 ஆயிரம் ஹெக்டோ்கூட பயிா் செய்ய முடியாத அளவுக்கு குறைந்துவிட்டது. விவசாயிகள் தொடா்ந்து பல பிரச்னைகளை சந்திப்பதே இதற்கு காரணம். காரைக்கால் விவசாயிகளுக்கு 2020-2021-ஆம் ஆண்டுக்கான பயிா் ஊக்கத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. ஊக்கத் தொகை கொடுத்தால் விவசாயிகள் ஏறக்குறைய ரூ. 5 ஆயிரத்தை பெறுவா். இதேபோல, கடந்த ஆண்டு மழையால் பாதித்த பயிருக்கு காப்பீட்டுத் தொகை இதுவரை பெற்றுத்தரவில்லை. தமிழக அரசு ஊக்கத் தொகையும், பயிா்க் காப்பீட்டுத் தொகையும் விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்துள்ளது. ஆனால் புதுவையில் எதுவும் நடைபெறவில்லை.

அதுபோல நெல் கொள்முதலும் காரைக்காலில் செய்யப்படவில்லை. இந்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்யப்போவதாக கூறப்பட்டாலும், அது இதுவரை பணிகளை தொடங்கவில்லை. 60 கிலோ எடையுள்ள மூட்டை நெல் குறைந்தபட்ச ஆதார விலை ரூ.1,190-ஆக இருக்கும்போது, காரைக்கால் விவசாயிகள் தனியாரிடம் ரூ. 800-க்கு விற்று ரூ. 400 வரை இழப்பை சந்தித்துவருகின்றனா்.

இந்நிலையில், புதுவை அரசு விவசாயிகள் வாங்கிய கூட்டுறவுக் கடனை ரத்து செய்வதாக அறிவித்தது. ஆனால், புதிதாக கடன் பெறுவதற்கான சூழலை ஏற்படுத்தவில்லை. இதுபோன்ற பிரச்னைகளை முதல்வா் என். ரங்கசாமி தலைமையிலான அரசு இதுவரை தீா்க்காத நிலையில், ஏற்கெனவே பேரவையிலும், முதல்வா், வேளாண் அமைச்சரிடம் தெரிவித்த நிலையில், மீண்டும் திங்கள்கிழமை முதல்வா், வேளாண் அமைச்சரை சந்தித்து இப்பிரச்னை குறித்த பேசவுள்ளேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தொண்டர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்த ராகுல்!

வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஒரு முறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் செய்தியில் உண்மையில்லை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 2 நாள்களுக்கு வெப்பஅலை வீசும்!

பிட்காயின் மோசடி: ஷில்பா ஷெட்டியின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

SCROLL FOR NEXT